அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - ரூ.9,062 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் விஜய் அறிவிப்பு!

 

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக அரசு சார்பில் ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அந்தத் தொகை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடின்றி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் பெற்ற அனைத்துத் தகுதியான விவசாயிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ.9,062.83 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்கு தடையின்றிப் பயன்பெறும் வகையில், தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வெளியாகியுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக விவசாயப் பெருமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.