"இரவு பகல் பாராது உன்னத சேவை" - மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

 

சர்வதேச மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், மருத்துவர்களின் உன்னதச் சேவையைப் பாராட்டித் தனது வாழ்த்துகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மருத்துவத் துறையினரின் மனிதநேயமிக்கப் பணிகளைப் பின்வருமாறு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

"மனித உயிர்களைக் காக்கும் மிக உன்னதமான மருத்துவப் பணியில், தங்களின் சொந்த நலனைக் பாராது, இரவு பகல் என எந்நேரமும் அயராது உழைக்கும் மருத்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மருத்துவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நோயாளிகளின் பிணி தீர்ப்பதில் மருத்துவர்கள் காட்டும் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் எல்லையற்ற மனிதநேயம் ஆகியவை என்றும் சமூகத்தால் போற்றத்தக்கது. அவர்களின் இந்த சேவைக்குத் தவெக அரசு என்றும் துணை நிற்கும்."

இந்தியாவில் புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பி.சி. ராய்  அவர்களின் நினைவாகவும், மருத்துவத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.