இன்று மாலை மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் தீவிரப் பிரசாரம் - புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

 

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் தவெக கட்சிக்கு மிகுந்த சவாலாக இருக்கும் எனக் கூறப்படும் சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று மாலை அங்கு தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று மாலை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திமுகவைக் குறிவைத்து ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான விவகாரங்களை அவர் தனது உரையில் எழுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அதிரடிப் பிரசாரமும், புதிய அறிவிப்புகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.