"கரூரில் உயிரிழப்புகளுக்கு முதல்வர் விஜய் தான் காரணம்" - சீமான் விமர்சனம்!

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகக் காட்டமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கும் உயிரிழப்புகளுக்கும் விஜய்யே முழுக்க முழுக்கக் காரணம் என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமிழக அரசு வேலை வழங்கிடுவது குறித்து விமர்சித்த அவர், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை தருவதாகக் கூறுவது வழக்கின் சாட்சிகளைக் கலைப்பதற்கான முயற்சியே" என்று சாடியுள்ளார்.

தமிழக அரசையும், ஆளும்கட்சியினரையும் தாக்கிப் பேசிய சீமான், "திரைப்படங்களில் பிளாக்கில் டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். எங்களை பார்த்து 'திரள் நிதித் திருடன்' என்று விமர்சித்தவர்களை நான் 'பிளாக் டிக்கெட் கூட்டம்' என்றுதான் அழைப்பேன்" என தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.