சட்டப்பேரவையில் வணக்கம் சொன்ன முதல்வர் விஜய்... கண்டுக்கொள்ளாமல் தெனாவட்டாக அமர்ந்திருந்த உதயநிதி!

 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தபோது, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழைந்த போது, அவையிலிருந்த உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் தொடர்ந்து அமர்ந்தே இருந்தார். இது தொடர்பான காணொலி இணையத்தில் பரவி விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்ற அரசியலமைப்புப் பதவிக்கு உரிய சபை நாகரிகத்தையும் மரியாதையையும் அளிக்க வேண்டும் எனப் பல இணையவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலமைச்சர் பதவி என்பது தனிநபருக்கு உரியது அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பால் உருவானது. எனவே, சபையில் நடந்துகொள்ளும் விதமே தலைவர்களின் அரசியல் பண்பாட்டைக் காட்டுகிறது என சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வெளியாகி வருகின்றன.