18 நாட்களில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 127 நிமிடங்கள் மட்டுமே பேசிய முதல்வர் விஜய்!

 

நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் அவையின் மொத்த செயல்பாட்டு நேரம் மற்றும் முதலமைச்சரின் உரையாற்றும் நேரம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது. இந்தக் காலக்கட்டத்தில் சபை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக 141 மணி நேரம், அதாவது 8,476 நிமிடங்கள் வரை செயல்பட்டுள்ளது.

இக்கூட்டத்தொடர் முழுமைக்கும் முதலமைச்சர் விஜய் அவையில் வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்கள், அதாவது 127 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்த 18 நாட்களில் அவர் அவையில் மொத்தம் 14 முறை மட்டுமே பேசியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, நேரடி விவாதங்கள் எதுவும் இல்லாத 110 விதியின் கீழ் மட்டுமே அவர் 6 முறை பேசியுள்ளதாகத் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.