காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவுத் திட்டம் - செப்.17ல் விருதுநகரில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி விருதுநகரில் முதலமைச்சர் மு.க. விஜய் இதனைத் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைப் பெருந்தலைவர் காமராஜர் பெயருக்கு மாற்றி அமைத்துள்ளது. மேலும், இத்திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் (காமராஜர் கல்வி பயின்ற பள்ளி) இத்திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.343 கோடி மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிற்கு (2026-27) ரூ.217 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான அரசாணை ஏற்கனவே கடந்த ஜூலை 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.