குடிநீர் பணிகளுக்கு ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் உத்தரவு!

 

தமிழகத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்காக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கோடைக் காலம் மற்றும் மழைக்காலத்திற்கு முந்தைய பராமரிப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். குடிநீர்க் குழாய்களைச் சீரமைத்தல், புதிய குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்குத் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணிகளுக்கு இந்த நிதி மூலம் முன்னுரிமை அளிக்கப்படும்.

நடப்பு குறுவை சாகுபடி பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான பாசன நீர் மற்றும் மானிய உதவிகளை வழங்கும் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 2.85 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறுவை சாகுபடிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்கும், கால்வாய்களைத் தூர்வாரி பாசன நீரை விரைவாகக் கடைமடை வரை கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான நிதியுதவிகள் அரசால் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.