முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணை - ஆன்லைன் விசாரணை நிராகரிப்பு... நேரில் ஆஜராவார்களா?!
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஆகஸ்ட் 7-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கருத்து வேறுபாடு காரணமாகத் தனித்து வாழ்ந்து வந்த நிலையில், விஜய் தனக்கு விவாகரத்தும் நிரந்தர ஜீவனாம்சமும் வழங்கக் கோரி சங்கீதா 2025 டிசம்பர் 24-ல் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இவ்வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களால் ஆன்லைனில் ஆஜராக இருதரப்பு வழக்கறிஞர்களும் அனுமதி கோரினர். ஆனால் அதை நிராகரித்த நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த முறை ஆன்லைன் விசாரணைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இன்று நடைபெறும் விசாரணையில் இருதரப்பும் எவ்வாறு ஆஜராகப் போகிறார்கள் அல்லது நீதிமன்றம் அடுத்தகட்டமாக என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.