“பூச்சாண்டி காட்டும் முதல்வரே... இதுக்கு தைரியம் உள்ளதா?” - முன்னாள் சபாநாயகர் அப்பாவு சவால்!
அரசுப் பணத்தைத் தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் கூறுவது வெறும் பூச்சாண்டி காட்டுவதற்கே என முன்னாள் சபாநாயகர் அப்பாவு சவால் விடுத்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்திற்கு நிலக்கரி சப்ளை செய்ததில் அதானி நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தங்களால் மின்வாரியத்திற்கு ரூ.826 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தணிக்கைக் துறை குற்றம் சாட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு இழப்பை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் 'விஜய் Gang'க்குத் தைரியம் இருக்கிறதா என்று அப்பாவு தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலைத் தடுப்போம் என்று கூறிக்கொண்டு வெறும் வாய்வார்த்தைகளால் பூச்சாண்டி காட்டுவதை விட்டுவிட்டு, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.