முதல்வரின் ரூ.82,000  சொகுசு நாற்காலி ... ஜீரோ கிராவிட்டி' வசதிகளுடன்  வைரலாகும் வீடியோ!

 

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் பயன்படுத்தும் பிரத்தியேக சொகுசு நாற்காலி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, தற்பொழுது தேசிய அளவில் மாபெரும் அரசியல் புயலையும் கடுமையான விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சாமானிய மக்கள் டெல்லியில் நிலவி வரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் வேளையில், முதல்வரின் இந்த ஆடம்பரப் பயன்பாடு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரீமியம் ரக நாற்காலியில், உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து நிம்மதி தரும் 'ஜீரோ கிராவிட்டி'  தொழில்நுட்பம், தானியங்கி கால் ரெஸ்ட்   உடலைத் தளர்த்தும் மசாஜ் செய்யும் வசதி (Built-in Massage) மற்றும் உயர்தர லெதர் குஷன்கள் போன்ற பல மெகா ஆடம்பர வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாதாரணமாக 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளேயே நல்ல அலுவலக நாற்காலிகள் கிடைக்கும் பொழுது, மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான விஐபி  சொகுசு நாற்காலி தேவையா என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தற்பொழுது காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.