வைரலாகும் வீடியோ... காபி, ஐஸ்கிரீம் தருவதில் துவங்கி டான்ஸ், கால்பந்து வரை ரோபோக்கள் - சீனாவில் குவியும்  சுற்றுலாப் பயணிகள்!

 

சீனாவில் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக மனித உருவிலான ரோபோக்கள் நடனமாடுவது, கால்பந்து விளையாடுவது, உணவு மற்றும் பானங்களை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ரோபோக்களின் செயல்பாடுகளை நேரில் பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

allowfullscreen

குறிப்பாக, சீனாவின் ஷென்சென் நகரம் தொழில்நுட்ப சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறி வருகிறது. அங்கு ரோபோக்கள் ஒருங்கிணைந்து நடனமாடும் நிகழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சில ரோபோக்கள் கால்பந்து விளையாடுவதுடன், காபி, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் வழங்குகின்றன. மேலும், ரோபோ நாய்கள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்களும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

ஷென்சென் நகரின் லோங்காங் பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பாதுகாப்புப் பணி, கடைகளில் உதவி செய்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் வருகை தருவதாகவும், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டை முன்னிட்டு ரோபோக்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன