வெடித்து சிதறிய எரிவாயுக் குழாய் ... பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் ... ஷாக் வீடியோ!
சீனாவில் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பால் அருகிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியதுடன், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
चीन में गैस पाइपलाइन में लीकेज के बाद भीषण धमाका! अचानक हुए इस विस्फोट ने इलाके में अफरा-तफरी मचा दी। धमाके की भयावहता ने एक बार फिर गैस पाइपलाइनों की सुरक्षा पर गंभीर सवाल खड़े कर दिए हैं। #China #GasPipelineExplosion #BreakingNews #ViralVideo #TopTrending #TopFans #TopFollowers #TopFriends
— Amit yadav (@amityadav_65) November 23, 2026
வெடிப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அருகிலுள்ள சாலைகள் மற்றும் சில உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கர வெடிச்சத்தத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
எரிவாயுக் குழாய்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.