சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்... அரையிறுதிக்கு முன்னேறி இந்திய  ஜோடி அசத்தல்!

 

 

 

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அருமையாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்காருப் ராஸ்முசன் ஜோடியை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடியது.

allowfullscreen

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வெற்றியைத் தமதாக்கிக் கொண்டது. இந்த வெற்றியைப் பெறுவதற்கு இவ்விரு அணிகளுக்கும் இடையே எழுபது நிமிடங்கள் கடுமையான போட்டி நிலவியது.

இதன் மூலம் சீனா மாஸ்டர்ஸ் தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக சத்விக் மற்றும் சிராக் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் இந்தச் சிறப்பான விளையாட்டுத் திறனுக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.