சகல செல்வங்களைத் தரும் சித்ரா பௌர்ணமி வழிபாடு... இதைச் செய்ய மறக்காதீங்க!
நாளை சித்ரா பெளர்ணமி. சித்ரா பெளர்ணமியில் இந்த விசேஷ வழிபாட்டை மறக்காதீங்க. சகல செல்வங்களைத் தரும் பெளர்ணமி வழிபாடு இன்றளவிலும் லட்சக்கணக்கானவர்களுக்கு பலனளித்துக் கொண்டிருக்கிறது.
பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர் நம் முன்னோர்கள் . பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
இந்து சமயத்தில் பல்வேறு சிறப்பு நாட்களும் பவுர்ணமி தினத்தன்றே வருகின்றன. 12 தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டிருக்கின்றன.
சித்ரா பவுர்ணமி - அனுமன் ஜெயந்தி
வைகாசி பவுர்ணமி - நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, வைகாசி விசாகம்
ஆனிப் பவுர்ணமி - சாவித்திரி விரதம்
ஆடிப் பவுர்ணமி - குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தி
ஆவணிப் பவுர்ணமி - ரக்சா பந்தன், ஓணம், ஆவணி அவிட்டம்
புரட்டாசி பவுர்ணமி - உமா மகேசுவர விரதம், பித்ரு பட்சம்
ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
கார்த்திகைப் பவுர்ணமி - கார்த்திகை விளக்கீடு
மார்கழிப் பவுர்ணமி - திருவாதிரை, தத்தாத்ரேய ஜெயந்தி
தைப் பவுர்ணமி - தைப்பூசம்
மாசிப் பவுர்ணமி- மாசி மகம்
பங்குனிப் பவுர்ணமி - வடநாட்டில் ஹோலி என்று பெயர், பங்குனி உத்திரம்
இந்துக்கள் மட்டுமல்லாமல் பெளத்தர்களும் பெளர்ணமி நாளை கொண்டாடுவது சிறப்பு. இலங்கையில் பௌத்தர்களுக்கு முழுநிலவு புனித நாளாக விளங்குகின்றது. பௌத்தர்கள் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த தினமாக ஒவ்வொரு முழுநிலவன்றும் வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றனர். ஆகவே ஒவ்வொரு முழுநிலவு நாட்களும் இலங்கையில் அரசு விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது.
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும்.
பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும். வீட்டில் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.சமீப காலமாக மலைகளைச்சுற்றி சிவபகதர்கள் வலம்வரத்தொடங்கி உள்ளனர் அதுவும் குறிப்பாக சிவன் குடிகொண்டிருக்கும் மலைகளை சுற்றி வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர்.