இன்றைக்குள் எழுத்துப்பூர்வ உறுதிமொழி தராவிட்டால் மீண்டும் போராட்டம் - மத்திய அரசுக்கு CJP கெடு!

 

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகக் கூறி, மத்திய அரசுக்கு ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால், அளித்த வாக்குறுதியை மத்திய அரசு இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், மாணவர்கள் மீதான வழக்குகள் தொடர்வதாகவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து இன்றைக்குள் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை கெடு விதித்துள்ளது.

இன்றைக்குள் எழுத்துப்பூர்வ உறுதிமொழி வழங்கப்படாவிட்டால், டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அக்கட்சி பகிரங்கமாக எச்சரித்துள்ளது.