10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - இ-சேவை மைய ஊழியர் கைது!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, பத்தாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கு முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இ-சேவை மைய ஊழியரைத் தொழிலாளர் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார்  கைது செய்துள்ளனர்.

நயினார்பாளையம் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர் துரைராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை அண்மைக்காலமாகக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, அந்த மாணவியிடம் அவரது பாட்டிக்குத் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது எனக் கூறி,  அவரைத் தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பாட்டியைப் பார்க்க வந்த சிறுமியிடம், யாரும் இல்லாத தனிமையைப் பயன்படுத்தித் துரைராஜ் கடுமையான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் தொல்லைகளில் ஈடுபட்டுள்ளார். இக்கொடுமையிலிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த சிறுமி, அழுது கொண்டே பெற்றோரிடம் விபரத்தைக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உடனடியாக இது குறித்துச் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மகளிர் போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார், சிறுமிகளின் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் துரைராஜ் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரை  தேடிக் கைது செய்து சிறையிலடைத்தனர்.