லேப்டாப்பிற்குச் சார்ஜ் போட்டபோது சோகம்: மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி - திருவள்ளூரில் சோகம்!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் லேப்டாப்பிற்குச் சார்ஜ் போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற 11-ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் தனது லேப்டாப்பிற்குச் சார்ஜர் போடும் பணியில் ஈடுபட்டுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாகச் சார்ஜரிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், மாணவன் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடுகளில் லேப்டாப், மொபைல் போன் போன்ற மின்சாதனப் பொருட்களைச் சார்ஜ் செய்யும்போதும் கையாளும்போதும் பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனப் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.