செம... தனி ஆளாக நதியைச் சுத்தப்படுத்திய இளைஞர்... வைரல் வீடியோ!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பீட்டு தபாஹி, ராஜ்கர் மாவட்டத்தில் மிகவும் மாசுபட்டுள்ள அஜ்நார் நதியைத் தனி ஆளாகக் களமிறங்கிச் சுத்தப்படுத்தி வருகிறார். எந்தவித அரசு உதவியும் இல்லாமல் தன் சொந்தச் செலவில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றி வரும் இவரது நற்பணி சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
நதியின் பல்வேறு ghat பகுதிகளில் பல மாதங்களாகத் தொடர்ந்து உழைத்து இவர் உருவாக்கியுள்ள மாற்றத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. ஆரம்பத்தில் இவரின் முயற்சியைப் பலரும் விமர்சித்த போதிலும், விடாமுயட்சியுடன் இவர் செய்த இந்தச் சேவை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனி மனிதனின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த இளைஞரின் செயல் அமைந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள இவரின் இந்த நற்காரியம் நாடு முழுவதும் பலருக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.