நாளை சென்னையில் முதல்வர் விஜய் பங்கேற்கும் விழா! விளையாட்டு வீரர்களுக்கு ரூ.17 கோடி பரிசு

 

 

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழா நாளை (அக்டோபர் 29) சென்னையில் நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த விழாவில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்.  

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.17 கோடி மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதுடன், சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேசப் போட்டிகளில் சாதித்த வீரர்களுக்கும் பாராட்டு

இதனுடன், சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கும் முதல்வர் ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பாராட்ட உள்ளார். ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களும் இந்த விழாவில் பாராட்டப்பட உள்ளனர்.  

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் இந்த விழா, தமிழக விளையாட்டு வீரர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.