“வி.எஸ்.பாபு மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” – முதல்வர் விஜய் உருக்கமான இரங்கல்!
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வி.எஸ்.பாபுவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்