கிராண்ட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

 

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழக கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்களை எதிர்கொண்டு பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பிரக்ஞானந்தாவின் அபாரமான மனஉறுதி மற்றும் மதிநுட்பமான ஆட்டம் இளம் தலைமுறையினருக்குப் பெரும் உத்வேகமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், உலக அரங்கில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.