இன்று கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் CM விஜய் ஆய்வு!
சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்றுநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள், தினசரி சுத்திகரிப்பு திறன் மற்றும் அங்குள்ள நவீன உள்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் விரிவாகப் பார்வையிட உள்ளார். சுத்திகரிப்பு நடைமுறைகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்குப் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும், சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தொழில் தேவைகளுக்குப் பயன்படுத்தும் அளவை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோயம்பேடு மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாள்தோறும் பல மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டுத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நகரின் நன்னீர் வளங்கள் சேமிக்கப்பட்டு, சென்னையின் கழிவுநீர் மறுசுழற்சி கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
நகரக் உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முதலமைச்சரின் இந்த நேரடி ஆய்வு அதிகாரிகள் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.