வழியில் மனுவுடன் காத்திருந்த நபர்... காரை நிறுத்தி கோரிக்கையைப் பெற்ற முதல்வர் விஜய்!
புதுக்கோட்டையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகச் சென்ற முதலமைச்சர் விஜய், வழியில் மனுவுடன் காத்திருந்த ஒருவரைக் கவனித்து தனது வாகனத்தை நிறுத்தினார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் மனுவுடன் நின்றிருந்த நபரைப் பார்த்த முதலமைச்சர், உடனடியாக வாகனத்தை நிறுத்தச் செய்தார். பின்னர் அந்த நபரிடம் நேரடியாக மனுவைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.பயணத்தின்போது பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுவைப் பெற்றுக்கொண்ட இந்த நிகழ்வு தற்போது கவனம் பெற்றுள்ளது.