ஒத்திவைக்கப்பட்ட திருச்சி பயணம்: டிசம்பர் 1-ம் தேதி பங்கேற்கிறார் முதல்வர் விஜய்!

 

 

தமிழக முதலமைச்சர் விஜய் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் டிசம்பர் 1-ம் தேதி திருச்சிக்குச் செல்ல உள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் 20-ம் தேதி திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனைக் கட்டடத் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையடுத்து அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது திருச்சியில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டுப் பாதுகாப்பு காரணங்களுக்காக டிசம்பர் 1-ம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது