லண்டனில் சங்கீதாவிடம் முதல்வர் விஜய்யின் பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான குடும்பப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் லண்டனில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான குடும்பத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், லண்டனில் வசிக்கும் சங்கீதாவை நேரில் சந்தித்துப் பேச விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
லண்டனில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இடத்தில் விஜய்யை சந்திப்பதற்காக நடிகை த்ரிஷாவும் வந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் சங்கீதா கடும் கோபமடைந்துள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னதாக, த்ரிஷாவுடனான நட்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவே சங்கீதா தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போதைய இந்தச் சூழல் காரணமாகப் பெற்றோரின் சமரசப் பேச்சுவார்த்தை முயற்சி வீணாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.