18 வயசு தான்...  'காட்ஜில்லா' பட  நடிகை கெய்லி ஹாட்டில் விபத்தில் பலி!

 

ஹாலிவுட் திரையுலகில் பிரபல அறிவியல் புனைகதை திரைப்படங்களான 'காட்ஜில்லா விஎஸ் காங்' மற்றும் 'காட்ஜில்லா எக்ஸ் காங்' ஆகியவற்றில் நடித்த இளம் நடிகை கெய்லி ஹாட்டில் கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தத் திரைப்படங்களில் 'ஜியா' என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் கோடி கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் இவர் ஆவார். அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த மோசமான வாகன விபத்தில் இவர் படுகாயமடைந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 வயதே ஆன இந்த இளம் பிரபலம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகையும் ரசிகர்களையும் உலுக்கியுள்ளது.

allowfullscreen

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த அவசர உதவி மீட்புக் குழுவினர் அவரை மீட்டு தீவிர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவர் பயின்ற பள்ளி நிர்வாகமும் இவரது திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளது.

சிறு வயதிலேயே தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர் கெய்லி ஹாட்டில். தனது அமைதியான மற்றும் எதார்த்தமான நடிப்பால் உலகம் முழுவதும் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட பெருமை இவருக்கு உண்டு. இளம் வயதிலேயே கெய்லி ஹாட்டில் விபத்தில் சிக்கி உயிரை விட்ட செய்தி திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாக மாறியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரை உலகச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் தொடர்ந்து தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.