கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை - தமிழக அரசு உறுதி!

 

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இன்றைய வழக்கு விசாரணையின் போது, காவல் துறை தரப்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் "சூலூர் சிறுமி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தற்போது சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது" என்று காவல் துறையின் புலனாய்வுப் போக்கிற்குத் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சில முக்கிய ஆவணங்களும், உறுதிமொழிகளும் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு மிக விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த அனைத்துத் துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

இதுமட்டுமன்றி, மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய வழக்குகளைக் கையாளுவதற்கும் அரசு சார்பில் இனி 'சிறப்புக் கவனம்' செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.