மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பின்புற சாலையில் தீ விபத்து... ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேதம்!
Updated: Sep 7, 2026, 13:05 IST
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புற சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டிச் சென்றவர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டுத் தப்பியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் பற்றிய தீ காரணமாக அந்த மொபட் வாகனம் முழுவதும் மெழுகு போல உருகிச் சேதமடைந்தது.
இந்த எதிர்பாராத தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். வாகனம் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது