இன்றும் சட்டசபையில் அனல் பறக்கும் - கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்!

 

இன்றும் தமிழக சட்டசபையில் அனல் பறக்கப் போகுது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலரும் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்ததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு, பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தனது விசாரணையை வெற்றிகரமாக முடித்து அரசுக்கு இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்நிலையில், அந்த விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலமாகக் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணை விவரங்களையும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுப்பதற்கான முக்கியப் பரிந்துரைகளையும் விரிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.