விவசாயக் கடன் ரத்து: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
Aug 10, 2026, 07:00 IST
நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், விவசாயிகளின் நலன் மற்றும் மாநில பட்ஜெட் குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும், இது நிறைவான பட்ஜெட்டாக அமையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது புதிய அரசு என்பதால் அதன் செயல்பாடுகளை மேலும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் நிதிநிலைமை தற்சமயம் இடம் தராவிட்டாலும் கூட, விவசாயிகளின் பயிர்க்கடன்களை அரசு படிப்படியாக முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.