தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம் - குவியும் வாழ்த்துகள்!
Oct 6, 2026, 06:10 IST
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்ற கடந்த 1955-ம் ஆண்டு 'தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்' தொடங்கப்பட்டு, பின்னர் 1973-ல் 'தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்' எனப் பெயர் மாற்றப்பட்டது. இம் மன்றம் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் மற்றும் கலைஞர்களைப் பாதுகாத்து வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள 'மக்கள் இசை பாணர்' முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.