undefined

நெருங்கும் தேர்தல்... வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிவிட்டு, காங்கிரஸ் பிரமுகர் கொடூரமாக கொலை!

 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் வட்ட செயலாளர் துவங்கி வார்டு கவுன்சிலர், கட்சி பிரமுகர் என்று அரசியல்வாதிகள் கொடூரமாக கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு அரசியல் முன்பகை காரணமாக இருந்தாலும், சொந்த பகை காரணமாகவும் வரவுள்ள தேர்தல் சமயத்தை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்வதாகவும் கருத்து நிலவுகிறது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள ரான் தோனி என்ற கிராமத்தில் வசிப்பவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரணப்பா சண்டிகவுடர் (40). சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அப்டேட்டாக இருப்பார். எப்போதும், ​​சமூக வலைதளங்களிலும் காங்கிரஸ் திட்டங்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் ரான் தோனி கிராமம் அருகே உள்ள டம்பாலா கிராமத்தில் உள்ள துர்கம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த சரணப்பா, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் வழி மறித்து, முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி, வெட்டிக் கொன்றது. பின்னர் கை, கால்களை கயிற்றால் கட்டி மரத்தில் பிணமாக தொங்கவிட்டனர்.

அதன்பின் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

பின்னர், சரணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துவதில் சரணப்பா எப்போதும் ஆக்டிவாக இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது மனைவியை பிரிந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. காவல்நிலையம் சென்று புகார் அளிக்குமாறு சகோதரி அறிவுரை கூறியும் அவர் அதற்கு பொறுப்பேற்காமல் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!