குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்பி - தவெக எம்எல்ஏ இடையே மோதல்!

 

திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது யாருக்கு என்பதில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் திருவெறும்பூர் தொகுதி தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அரங்கில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ரமேஷ் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் மற்றும் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாத் தொடக்கமாகக் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது, முதலில் விளக்கு ஏற்றுவது யார் என்பதில் இருவருக்கும் இடையே சலசலப்பு எழுந்துள்ளது.

உடனடியாக அமைச்சர் ரமேஷ் தலையிட்டு இருவரிடமும் பேசி சமாதானம் செய்தார். அதனைத் தொடர்ந்து நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார். இருப்பினும், காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு எதையும் ஏற்றாமல் விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து விழா வழக்கமான முறையில் தொடர்ந்தது.