தொடரும் கொலைச் சம்பவங்கள்... “கதாநாயக சாகசங்களைக் காட்டலாம் என நினைக்கறீங்களா? - கனிமொழி கடும் விமர்சனம்!
Sep 10, 2026, 08:50 IST
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாள்தோறும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல ஆரம்பத்தில் கொடூரக் கொலைகள் நடப்பதைத் வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது 'கதாநாயக சாகசங்களைக்' காட்டி அனைத்தையும் சரிசெய்யலாம் என ஏதேனும் திட்டம் வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.