தொடரும் போர் பதற்றம்... இன்று பாகிஸ்தான் செல்கிறது அமெரிக்க குழு - பேச்சுவார்த்தை பலன் தருமா?!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நம்பிக்கைக்குரிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவை இன்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கிறார். இன்றைய பேச்சுவார்த்தை பலன் தர வேண்டும் என்று உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். இவருடன்: ஜனாதிபதி டிரம்பின் மருமகனும் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், இறுதியான உடன்படிக்கையை எட்டவும் இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவி வரும் சூழலில், இந்த அமைதி முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.