சர்ச்சை வீடியோ... முதல்வர் விஜய் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய திமுக எம்எல்ஏ!

 

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், முதலமைச்சர் விஜய் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

allowfullscreen

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் போராடிச் சிறையில் இருந்த தலைவர் மு.க.ஸ்டாலினின் முகம் கோணலானது உண்மை தான் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "உனக்குக் கூட வாய் கோணலாகத் தான் உள்ளது; அது எப்படி ஆனது என்று என்னால் சொல்ல முடியாது" என முதலமைச்சர் விஜய் குறித்து இரட்டை அர்த்தத்தில் தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.