சர்ச்சை... தவெக கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள் இயக்கம்!
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படவுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு அடிக்கப்பட்டுள்ள வர்ணங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தை ஒத்திருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
சேலத்தில் இயக்கப்படவுள்ள புதிய புறநகர் பேருந்துகளின் மேல் பகுதி மஞ்சள் நிறத்திலும், கீழ் பகுதி சிவப்பு நிறத்திலும் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்த நிறக் கலவையானது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறங்களுடன் ஒத்துப்போவதாக அமைந்துள்ளது.
தவெக கொடியின் நிறத்திலேயே புதிய அரசுப் பேருந்துகள் வந்துள்ளதால், இதுகுறித்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த புதிய பேருந்துகளைச் சேலத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு இயக்குவதற்குப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.