"காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை.. வாக்குறுதியை நிறைவேற்றுங்க” - இபிஎஸ் வலியுறுத்தல்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படும் என்று தவெக அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரினார்.

பெண் காவலர்களை இரவு நேரப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஓய்வு பெறக் காத்திருக்கும் காவல் ஆய்வாளர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.