கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

 

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து 5க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும்பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.  கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். . 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு  226 லிட்டர் சாராயம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அடுத்தடுத்து சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.