ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறாக பேச பாடகி கெனிஷாவுக்கு தடை - நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான சட்டப் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரவி மோகனின் தோழியாகக் கூறப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கு எதிராக ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கியக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிந்து வாழ்ந்து வருவதோடு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில், பாடகி கெனிஷா தனக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக ஆர்த்தி ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்த்தி ரவிக்கு எதிராக எவ்விதமான அவதூறு கருத்துகளையும் தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆர்த்தி தாக்கல் செய்துள்ள இந்த மனு குறித்து விளக்கம் அளிக்கக் கோரி பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிவதாக ரவி அறிவித்திருந்தாலும், பாடகி கெனிஷாவுடனான நட்பு குறித்தே சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் எழுந்து வந்தன. இப்போது நீதிமன்றமே கெனிஷாவுக்குத் தடை விதித்திருப்பது இந்த விவகாரத்தில் ஆர்த்தி ரவியின் சட்டப்பூர்வமான போராட்டத்திற்கு ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.