திமுக ஜென் Z சரண்ராஜை ரிமாண்ட் செய்ய நீதிமன்றம் மறுப்பு; போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம்!
தவெக பெண் நிர்வாகியைப் பற்றிச் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திமுகவின் 'ஜென் Z'சமூக ஊடகப் பிரமுகரான ஆர்ஜே சரண் ஜெயராமனை நீதிமன்றக் காவலில் அடைக்கச் சென்னை எழும்பூர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும், போலீசாரின் இந்த அவசரக் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
தவெக மற்றும் தவெக ஆதரவு பெண் நிர்வாகிகளை அநாகரீகமாக அவதூறு பேசியதாகவும், உருவக்கேலி மற்றும் தனிமனிதத் தாக்குதல் நடத்தியதாகவும் திமுக ஆதரவாளரான ஆர்ஜே சரண் ஜெயராமன் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் சரண் ஜெயராமனை அதிரடியாகக் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!… pic.twitter.com/LlZVr6j1NY
— Polimer News (@polimernews) July 4, 2026
சரண் ஜெயராமனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கக் கோரிய போலீசாரின் மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறை உரியச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனச் சுட்டிக்காட்டிப் பின்வரும் காரணங்களுக்காக ரிமாண்ட் செய்ய மறுத்து விட்டார். கைதிற்கான உரிய மற்றும் முறையான காரணங்களைக் கைது செய்யப்பட்ட நபரிடமும், நீதிமன்றத்திலும் போலீசார் தெளிவாகத் தெரிவிக்கத் தவறிவிட்டனர்.
7 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் 'அர்னேஷ் குமார்' வழிகாட்டுதல்களைப் போலீசார் இந்த விவகாரத்தில் முற்றிலும் மீறியுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே அவசர அவசரமாக நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டிய எவ்வித அவசியமும், கட்டாயமும் தற்போதைய சூழலில் இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
போலீசாரின் காவலில் அடைக்கும் கோரிக்கை மனுவை முற்றிலும் நிராகரித்த எழும்பூர் நீதிமன்றம், கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகர் ஆர்ஜே சரண் ஜெயராமனை உடனடியாகப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.