குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 

 

வடகிழக்குப் பருவமழை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டித் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இன்று காலை முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கரையில் தடுப்புகள் அமைத்துப் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைப் பகுதிகளில் மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனத் தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.