பரவும் கிரிக்கெட் காய்ச்சல்.. இன்னிங்க்ஸ் பிரேக்கில் சிறப்பு நிகழ்ச்சி.. கலை கட்டப் போகும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி..!
Oct 13, 2023, 16:32 IST
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கிடையே இன்னிங்க்ஸ் பிரேக்கில் 10 நிமிட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரையில் நடந்த 10 லீக் போட்டிகளில் சென்னையில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே ரசிகர்களின் வருகை அதிகளவில் இருந்துள்ளது. ஆனால், மற்ற மைதானங்களான ஹைதராபாத், டெல்லி, தரமசாலா ஆகிய மைதானங்களில் நடந்த போட்டிகளில் ரசிகர்களின் வருகையானது போதுமானதாக இல்லை. இதன் காரணமாக மைதானங்கள் வெறிச்சோடி காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.