நாடு முழுவதும் 14 மாநில முதல்வர்கள் மீது குற்றவியல் வழக்குகள் - உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை!

 

நாடு முழுவதும் பதவி வகிக்கும் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மொத்தம் 4,192 குற்றவியல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.