தவெக எம்.எல்.ஏ-க்கள் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள்... மக்கள் அதிர்ச்சி!
தமிழகச் சட்டமன்றத்தில் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கிரிமினல் பின்னணி கொண்ட உறுப்பினர்கள் பட்டியலில் தவெக முதலிடம் பிடித்துள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 எம்.எல்.ஏ-க்களில் 41 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், 41 பேரில் 19 பேர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மக்களின் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்திற்குச் செல்பவர்கள் மீது இத்தகைய கடுமையான வழக்குகள் இருப்பது ஜனநாயக ஆர்வலர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைமையின் வேட்பாளர் தேர்வில் நிலவிய குளறுபடிகளே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
குற்றப் பின்னணி ஒருபுறம் இருக்க, மறுபுறம் தவெக எம்.எல்.ஏ-க்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்பதும் அவர்களின் வேட்புமனுத் தாக்கல் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களில் பலரது சொத்து மதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டுவது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறிப் போட்டியிட்ட தவெகவின் இந்தத் தற்போதைய புள்ளிவிவரங்கள், அக்கட்சியின் பிம்பத்திற்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.