முதலை வயிற்றில் மனித பாகங்கள்...  காணாமல் போன தொழிலதிபர் விவகாரத்தில் அதிரடி திருப்பம்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 

தென்னாப்பிரிக்காவின் எம்புமலங்கா மாகாணத்தில் உள்ள கோமதி ஆற்றில் காணாமல் போன தொழிலதிபரைத் தேடும் பணியில் அதிர்ச்சியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஆற்றுப்பாலத்தின் அடியில் அவரது கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு முதலையைச் சுட்டுக்கொன்று அதன் வயிற்றை ஆய்வு செய்தபோது, உள்ளே மனித உடல் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆபரேஷனில் துரிதமாகச் செயல்பட்ட மீட்புக் குழுவினரை மாகாண போலீஸ் கமிஷனர் பாராட்டியுள்ளதோடு, பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். வனவிலங்குகள் அதிகம் உள்ள ஆற்றுப் பகுதிகளில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக மழைக்காலங்களில் பாலங்களைக் கடக்கும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஎன்ஏ முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்