புரட்டாசி சனிக்கிழமை விரதம் நிறைவு - இறைச்சி, மீன் கடைகளில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

 

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை, கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர் மற்றும் இதர துறைமுகப் பகுதிகளில் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்ததால், பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர். விலை நிலவரப்படி வஞ்சரம் மீன்: கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை, வவ்வால் மீன்: ரூ.700, சங்கரா மீன்: ரூ.350, இறால்: ரூ.250 என விற்பனையானது.

சிக்கன் ஒரு கிலோ ரூ.240-க்கும், ஆட்டிறைச்சி (மட்டன்) ரூ.850-க்கும் விற்பனை செய்யப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அசைவ உணவுகளை உட்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியதால், அனைத்துச் சந்தைகளிலும் வியாபாரம் களைகட்டியிருந்தது.