மீன்கள் வாங்க அலைமோதிய கூட்டம்... வரத்து குறைவால் விலை உயர்வு!
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் கடலில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு, பைபர் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
எனவே கடந்த 26ம் தேதி முதல் நேற்று வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு, பைபர்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதிக்கு முன்பு திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர்.
குறைந்த அளவு மீனவர்களே மீன்பிடிக்க சென்று வந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்தும் குறைவாக காணப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் மாவட்டத்தில் பல இடங்களில் மீன் ஏலம் நடைபெறாததால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகளும் குவிந்தனர்.
ஆனால் திரேஸ்புரம் மீன் பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை உயர்ந்தது. நேற்று ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,200 வரையும், விளைமீன் கிலோ ரூ.500 வரையும், பாறை மீன் மற்றும் ஊளி மீன் கிலோ ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.450 வரையும், சாளை மீன் ஒரு கூடை 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் விற்பனையானது.
கார்த்திகை மாதம் மீன்களின் விலை குறைந்து காணப்படும். ஆனால் புயல் சின்னம் காரணமாக தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!