"கேஸ் சிலிண்டருக்கு கிரீடம் சூட்டி ராஜ மரியாதை!" - நடிகை சமீரா ரெட்டியின் வைரல் வீடியோ!

 

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்திருந்தது.  பதிவு செய்த பல நாட்களுக்குப் பிறகே சிலிண்டர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி இந்தச் சூழலைத் தனது பாணியில் நையாண்டி செய்து வீடியோ வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/yW28yDvQJiA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/yW28yDvQJiA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

தனது வீட்டிற்குப் புதிய சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதை ஒரு பெரிய வெற்றியாகக் கருதிய சமீரா ரெட்டி, அதற்குச் சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார். அந்தச் சிலிண்டரை வீட்டிற்குள் கொண்டு வரும்போது ஒரு விஐபி-யைப் போல பாவித்து அவர் செய்துள்ள செய்கைகள் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளன.

வெறும் வரவேற்போடு மட்டும் நிறுத்தாமல், அந்தச் சிலிண்டரின் மீது ஒரு கிரீடத்தை  சூட்டி அழகு பார்த்துள்ளார். மேலும், சிலிண்டருக்குப் பணத்தால் விசிறி விடுவது போலவும், அதற்குத் திஷ்டி கழிப்பது போலவும் வீடியோவில் காட்சியளிக்கிறார். சிலிண்டர் கொண்டு வந்த ஊழியருக்கு அன்புடன் காபி கொடுத்து உபசரிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. "நிஜமாவே இப்போ சிலிண்டர் கிடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு, சமீராவின் இந்த நையாண்டி மிகச் சரியானது" எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது முதிர்ந்த வயதிலும் எப்போதும் கலகலப்பாகச் செயல்படும் சமீராவின் இந்த 'கண்டென்ட்' தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.